இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

37

கேள்வி: ஜாதகத்தில், சந்திரன் அமரும் நட்சத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவது ஏன்?

Advertisment

பதில்: வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் ஜாதகருக்கு இன்பம் தருபவையாகவோ, துன்பம் விளைவிப்பதாகவோ, ஜாதகரின் மனதால் மட்டுமே உணரப்படுகிறது. ஆகவே மனமே வாழ்க்கையாகிறது. மனதின் காரகனாகிய சந்திரனுக்கும், அதன் ராசி, நட்சத்திரத்திற்குமுள்ள தொடர்பே வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஜாதகரின் ஜென்ம நட்சத்திரத்தின் அறுபது நாழிகைகளும் பகுத்து ஆராயப்பட்டு, சந்திர அவஸ்தை யும், சந்திரக்கிரியை மற்றும் சந்திர வேளையும் கணக்கிடப்படு கின்றன. இதனால், ஜாதகரின் மனோநிலையையும், அவர் வாழ்வில் பெறும் வெற்றி, தோல்வி களையும் கோடிட்டுக் காட்ட முடியும். முற்பிறவியில் ஒருவர் விட்டுச்சென்ற தசா, புக்தி, அந்த ரமே இப்பிறவியில் ஜனன கால தசா, புக்தி, அந்தரமாக அமையும்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்திற் கும், கோட்சாரத்தில் சந்திரன் நிற்கும் நட்சத்திரத்திற்கும் உள்ள தொடர்பைக்கொண்டே தாரா பலம் காணமுடியும்.

ஒருவரின் ஜனன காலத்து, தசா, புக்தி, அந்தரங்களில் இடம் பெறும் கிரகங்கள், சந்திரனுடன் கொள்ளும் தொடர்பையே காலக் கணிதத்தின் அடிப்படையாக "கந்தர்வ நாடி' விளக்குகிறது.

Advertisment

gandarvanadi

ஒவ்வொரு ஜாதகமும் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் எனும் நான்கு முகங்களைக் கொண்டவையே. லக்னம், ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாவம் தர்மத்தையும்; இரண்டு, ஆறு, பத்தாம் பாவங்கள் செல்வத்தையும்; மூன்று, ஏழு, பதினோ றாம் பாவங்கள் காம சுகத்தையும்; நான்கு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்கள் மோட்சமெனும் வீடுபேறையும் குறிக்கும். இந்த நான்கு முக்கோணங்களே ஒருவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். இந்த முக்கோணங்கள் இச்சா சக்தி எனும் ஆசையில் தொடங்கி, ஞானசக்தி எனும் அனுபவம் பெற்று, கிரியாசக்தி எனும் படைப் பில் முடியும். ஒரு ஜாதகரின் விருப்பம், முயற்சி, நிறைவு என்ற மூன்று நிலைகளையும் ஆராயும் விதத்தை "கந்தர்வ நாடி' விளக்குகிறது.

""அருட்கடலே! இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களிடமும், தாங்கள் பாரபட்சமின்றி அருள்பாலிக்கிறீர்கள். இருந்தாலும் சிலர் வறுமையில் வாடுவதும், வேறுசிலர் செல்வத் தில் திளைப்பதுமாக வாழ்கிறார்கள். இந்த வேறுபாட்டின் காரணத்தை உலகோரும் உணருமாறு விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை அபூர்வநாயகி, திருந்துதேவன் குடி எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு கற்கடேஸ்வரரை வணங்கிக்கேட்டாள்.

Advertisment

திருநீலகண்டன் உரைத்தது- ""பிறப்பும் இறப்பும், உறக்கமும் பசியுமே எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. வாழ்க்கை நிலை மட்டுமே மாறுபடும். ஒரு சக்கரத்தின் மேல்பகுதி கீழ் நோக்கியும், கீழ்ப்பகுதி மேல் எழுந்தும் செல்வதால் மட்டுமே இயக்கம் உண்டாகிறது. அது போலவே காலச்சக்கரமும் சுழல்கிறது. மேடு, பள்ளம் இருப்பதால் மட்டுமே மலைகளில் துவங்கும் நீர், நதிகளாய் ஓடும். நீரின்றி அமையாது இவ்வுலகம். கீழ் நிலையில் உள்ளோர் முயற்சியால் மேலான நிலைக்குச் செல்வதாலும், மேல்நிலையில் gandarvanadiஉள்ளோர் ஆணவத்தால் கீழான நிலையை அடைவதாலுமே தர்மச்சக்கரம் சுழல்வதை உணரமுடிகிறது. ஏற்றத்தாழ்வால் வருவதே சிருஷ்டி. அதனால் ஏற்படுவது அனுபவம். அனுபவத்தால் உணரப்படுவதே ஞானம். ஜடப்பொருள் உயிர்பெறுவதும், உயிரை ஜடமாக்குவதுமே இயக்கம். இயக்கமே இயற்கையின் நியதி.''

""மெய்ஞ்ஞான குருவே! "நிகுஞ்சிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய புனர்பூச நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், ஹஸ்தம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், அனுஷம் இரண்டாம் பாதத்தில் சனியும், கேட்டை நான்காம் பாதத்தில் செவ்வாயும், திருவோணம் நான்காம் பாதத்தில் குருவும், கிருத்திகை முதல் பாதத்தில் புதனும், ரோகிணி முதல் பாதத்தில் சூரியனும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விரிவாக விளக்க வேண்டும்'' என்று திருநாரையூர் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீசுயம்பிரகாசரை அன்னை திரிபுரசுந்தரி வினவினாள்.

திருமூலநாதர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் விதுரன் எனும் பெயருடன் ஒரு சத்ரிய குலத்தில் வாழ்ந்தான். கல்வியில் தேர்ச்சி பெற்று, அரசின் காவல் அதிகாரியாகப் பணியாற்றினான். அவ்வமயம் இரவுக்காவலுக்குச் செல்லும்போது ஒருவன் வீழ்ந்து கிடப்பதையும், அவனருகில் மற்றொரு வன் பதைபதைப்புடன் நிற்பதை யும் கண்டான். கள்வர்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் கொலையிருமாய்க் கிடந்த வனைக் காப்பாற்ற வந்தவனைக் கொலைக்குற்றம்சாட்டி கழுவிலேற்றினான். தீர விசாரிக் காமல் அறம் பிறழ்ந்தான். முதுமையில் உயிர்நீத்து, தென் திசைக் காவலனைக் காண எமலோகம் சென்றான். அங்கு தண்டனைப்பெற்று நரகம் சென்றான். இப்பிறவியில் ஆணைக் கட்டி எனும் ஊரில் விஸ்வகர்மா குலத்தில் பிறந்து, தன் தந்தை விட்டுச்சென்ற பொற் கொல்லர் தொழிலைச் செய்துவந்தான். ஒரு நாள், தன் உறவினர் கொடுத்து உருக்கச் சொன்ன நகைகள் திருட்டு நகைகள் என்று அறியாமல் வாங்கி வைத்திருந்த தால் காவலரால் குற்றஞ்சாட்டப்பட்டு, நீதிகேட்டுப் போராடுகிறான். இதற்குப் பரிகாரமாக சஷ்டி விரதமிருந்து, பொன்னூதி சென்று இடும்பனையும் குமரனையும் வழிபட, அவன்மேல் சுமத்தப் பட்ட பழிநீங்கி சுகம் பெறுவான்.''

(வளரும்)

செல்: 63819 58636

______________

நாடி ரகசியம்

1. குரு, சுக்கிரன், சனி கூடியிருக்க, புகழும் வெற்றியும் உண்டாகும்.

2. புதன், சுக்கிரன், சனி தொடர்பிலிருக்க, தொழிலில் தொடர் வெற்றிகளைக் காண்பார்.

3. செவ்வாய், சுக்கிரன், சனி சம்பந்தப்பட்டால், முன்கோபமும், பெரியோருக்கு அடங்காத குணமும் கொண்டவராகத் திகழ்வார்.